பிராட்வே ஃப்ராடு வே
{ஏமாற்றும் வழி}
தமிழ்நாட்டில் சென்னை மாநகரம் உள்ளது. இங்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உள்ள பெரும்பாலான மக்கள் வேலைத் தேடி வருகின்றனர். என்பது பொதுவாகவே நமக்கு தெரியும். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் ஏமாற்றும் முயற்சியிலும் ஏமாற்றியும் வருகின்றனர். ஏமாத்துவதற்கான
வழியையும் தேடி வருகின்றனர். பொதுவாக நீங்கள் எல்லா இடத்திலும் பார்க்கலாம், குறிப்பாக பேருந்து நிலையம், இரயில் நிலையம், மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டி தான் இது. முழுநேரம் வேலை செய்தால் மாதம் 30,000 மும். பகுதி நேரம் வேலை செய்தால் 15,000 மும் ஞாயிறு மட்டும் வேலை செய்தால் மாதம் 8,000 சம்பாதிக்கலாம்னு இருக்கும். இதற்கு வயது வரம்பு கிடையாது. படிப்பு 6 ம் வகுப்பு போதும். இதை பார்த்து ஆசைப்பட்டு போகும் அப்பாவி ஜனங்கள் ஏமாந்து வருவது தான் கவலைக்கு உரிய விஷயமாக உள்ளது.
இந்த விளம்பரத்தை பார்த்து நீங்க அவுங்களுக்கு ஒருமுறை அழைத்தால் போதும் அவர்கள் உங்களை பத்து முறைக்கு மேல் அழைப்பார்கள் உங்களை அவர்கள் நீங்கள் வரும் வரை விடமாட்டார்கள். சரி என்ன வேலை சார்னு நீங்க கேட்பிங்க? அவுங்க சார் உங்க பேர் என்ன? நீங்க எங்க இருந்து பேசுறிங்கனு கேட்பாங்க அப்பறம் இது ISO தரச்சான்றிதழ் பெற்ற வெளிநாட்டு கம்பெனி, இது மார்க்கெட்டிங், சேல்ஸ் வேலை கிடையாது சார். நாங்க உங்களுக்கு அட்ரஸ் சென்ட் பன்றம். நீங்க நேரடியா வந்து இன்டர்வீயு அட்டன் பன்னுங்க ஜாப் பத்தின முழு டீட்டைல் சொல்லுவாங்கனு சொல்லி போன கட் பன்னிடுவாங்க
சரி நல்ல வேலை கிடைக்கும் என்று நீங்கள் நம்பி அந்த அட்ரஸ்க்கு போனீங்கனா உங்களை பல ஆஃபிசர் போல இருக்கவங்க நல்லா வரவேற்பாங்க ஆன அவுங்களும் நம்மல மாதிரி வந்தவங்கனு தான் உங்களுக்கு தெரியாது. சார் உங்க பேர் தான் முரளியா? முதல்ல ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் அதாவது பதிவு கட்டணம் 100 ரூபாய் கட்டணும்னு சொல்லுவாங்க 100 ரூபா தான சொல்லிட்டு நாமலும் கட்டிடுவம். உங்களை அப்படியே வெயிட் பன்ன சொல்லுவாங்க உங்களை போல அங்க ஒரு 100 பேரு கிட்ட வந்து இருப்பாங்க… எல்லாரும் பதிவு கட்டணம் 100 கட்டி ரூம்ல வெயிட் பன்னிட்டு இருப்பாங்க அப்படியே பக்கத்துல இருக்கவங்க கிட்டலாம் சார் இது என்ன வேலை? சார் இது என்ன வேலைனு கேட்பிங்க அவரும் அப்படியே தெரியல சார் நானே இப்ப தான் வந்தன். அப்படினு கூலா பதில் சொல்லுவாரு..
ரூபாய் அப்பா! ஒரு
நாளைக்கு சும்மாவே 10.000 சம்பாதிச்சிட்டாங்க இல்ல

வாங்க இன்னும் இருக்கு..
ஜாப் பத்தின டீட்டைல் சொல்ல முதலில் ஒருத்தவரு வருவாரு அவரு கோர்ட் ஷூட்லாம் போட்டுக்குனு பார்க்க பெரிய ஆளு
போல இருப்பாரு.. ஜாப் பத்திலாம் சொல்லிட்டு அவரு போயிடுவாறு அப்பறம் அடுத்த ஆளு வருவாரு இவர் யாருனா? இந்த ஜாப் மூலமா பெரிய ஆளா ஆனவரு. இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாறுலாம்
சொல்லுவாரு சொல்லிட்டு கடைசியில நான் இங்க வந்தன் உங்கள மாதிரி இந்த ஜாப் பார்த்தன். இப்ப என்னுடைய வார சம்பளமே 20.000 னு சொல்லுவாரு, இது மட்டுமா! சென்னையில புது வீடு வாங்கிட்டன். இந்த கம்பெனியில எனக்கு கார், பைக்லாம் வாங்கிகொடுத்திருக்காங்கனு
சொல்லும் போது நமக்கு ஒரு கனவு வரும் நாமலும் இது போல ஆகனும்னு. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதல வெறும் 5.000 பணம் கட்டி உறுப்பினரா ஆகனும், அடுத்து ஒரே ஒரு ஆள சேர்த்துவிடுவது
தாங்க அது கூட வேணாம்ங்க அதுவும் நாங்கலே சேர்த்து விட்டுடுவங்க, உனக்கு கீழ இருக்க அவுங்க வேல செய்தாலே
போதும் தானவே உங்களுக்கு பணம் வர ஆரம்பிச்சுடும். இந்த ஆசை வார்த்தையில பல பேர் மயங்கி சேர்ந்துடுவாங்க அடுத்து தான் இருக்கு டிமிக்கி
நீங்களும் அவுங்கள போலவே ரோடு ரோடா போஸ்டர் ஓட்டி அந்த போஸ்டர பார்த்து ஏமாந்து வர
மக்களை எப்படியாவது சேர வச்சி அவன் கட்ற அந்த பணத்தை வச்சி இவுங்களுக்கு அந்த கம்பெனி
கமிஷன் கொடுக்கும். நம்மை ஆள சேர்த்துவிட்டா தான் பணம் வரும்னு சொல்லுவாங்க… நம்மலும் பெரிய ஆளா ஆகனும்ன்ற கனவுல
எப்படியாவது ஒரு 2 பேர சேர்க்க நினைப்போம். நம்மல மாதிரி சேர்ந்தவன்லாம் கட்டண பணமாவது எடுக்கனும்னு ஓரு 2 பேர சேர்க்க நினைப்பான். அவன் கஷ்டப்பட்டு 2 பேர சேர்த்தா 500 + 500 னு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆன இந்த பணம் எடுக்க முடியாது. குறைந்தபட்சம் 4.000 ரூபாயாவது இருந்தா தான் எடுக்க முடியுமாம். இவுங்கல சேர்த்ததே பெரிய வேலை இன்னும் 2 பேருக்கு நாம எங்க போரது. நோந்து போய் இந்த வேலைய சில பேர் முயற்சி
செய்து கைவிட்டுடுவாங்க.. பேச்சு திறமை இல்லாத பல பேர் பணம் கட்டிட்டு முடியாம போய்டுவாங்க.. இப்படி ஓரு ஆள வேலன்ற பேர்ல சேர்த்துவிட்டு
அவன் பணத்தை இப்படி பங்கு போடுறாங்காலே இது ஃப்ராடா? இல்லையா? நீங்களே சொல்லுங்க… இந்த வேலை அவுங்கல போல பேச்சு திறமைய வெச்சி ஏமாத்துறவங்களுக்கு பொருந்தும். ஆனால் அப்பாவி மக்கள் என்ன பன்னுவாங்க
இது பாவம் இல்லையா! இந்த வேலையில சம்பாதிக்க முடியும் தாங்க நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இது எல்லாருக்கும் பொருந்துமா
என எண்ணிப் பாருங்கள் இவுங்களுக்கு என்ன மத்தவங்கள ஏமாத்தி பணம் புடுங்கினா போதும்
எவன் எப்படி போனா நமக்கு என்ன? நமக்கு தேவை பணம் வருதா அவ்ளோ தான்.. சில பேர் இல்ல இல்ல பல பேர் இந்த வேலையே வேணாம்னு கட்டண பணத்தை அப்படியே விட்டுட்டு
வேற வேலை தேடி போயிட்டாங்க
இது மாதிரி திட்டமிட்டு செய்ற ஏமாத்துற
வேலை சென்னையில ரொம்ப பெருகி வருதுங்க…
குறிப்பா சொல்லனும்னா… சில வேலைகள இதுக்கு நான் எடுத்துக்காட்டா
சொல்றன்.
1. ONLINE
JOBS
2. SMS
JOBS
3. CANDLE
WORK.
4. INSURANCE
JOBS
5. DEPOSIT
JOBS
6. PLACEMENT
SERVICES
விழிப்பாக இருங்கள்…
தினகரன், மற்றும் சில நாளிதழில் வரும் செய்தி தான் industrials
jobs.. இவர்கள் படிப்புக்கு தகுந்த சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் இடத்தில் தங்கும் வசதியுடன் வேலை என்று விளம்பரத்தை தமிழ்நாட்டில் எந்த மூளையில் இருந்து வேண்டுமனாலும் வரலாம் என கொடுத்துவிடுவார்கள் இது போன்ற நிறுவனங்கள் அதிகபட்சமாக கோவை மாநகரில் தான் அதிகமாக காணப்படுகிறது.
இவர்களிடம் ஜாப் பத்தின டீட்டைல் போன் பன்னி கேட்டால் நேரில் வரச் சொல்லுவார்கள். வரும் போது வெறும் உங்களுடைய resume மட்டும் எடுத்து வரச் சொல்லுவார்கள்.. வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நாலைந்து மாவட்டங்கள் தாண்டி பணம் செலவு செய்து முகவரி தேடி அலைந்து ஒரு வழியா போய் சேர்ந்தால் அங்கு வரவேற்பரையில ஒர பெண்ணை உட்கார வைத்திருப்பார்கள் அந்த பெண் உங்க ரிசம் கொடுங்கனு சொல்லி வாங்கிக்கனு ஒரு விண்ணப்பம் கொடுப்பாங்க அந்த விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் கொடுங்கனு கேட்பாங்க ஏன்னு கேட்டால் இது ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் என்பார்கள்.. பிறகு வெயிட் பன்னுங்கனு சொல்லிட்டு அந்த பொண்ணு விண்ணப்பத்தையும், ரிசமையும் மேனேஜர் அறைக்கு எடுத்துக்குனு போவாங்க கொஞ்ச நேரம் கழித்து மேனேஜர் கூப்பிடுறாருனு சொல்லுவாங்க.. சரி வேலை கெடச்சிடும்னு போன அவரு வேலை பத்தின டீட்டைல் வேலை எங்க வேண்டும்னு கேட்டுட்டு கடைசியில 1500 ரூபாய் கொடுங்கனு சொல்லுவாரு அப்படியே பக்குனு தூக்கிப்போடும் பாரு அப்பா! உறுதியா வேலை கிடைச்சிடும் இல்ல சார் கண்டிப்பா உங்க வீட்டுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர அனுப்புவம்னு சொல்லுவாங்க சரி இவ்வளவு தூரம் வந்துட்டமே என்னப் பன்றது இருக்குற பாதுகாப்பு பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு நாமலும் வீட்டுக் கிளம்பி போயிடுவம். எப்ப அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும்னு காத்துக்கிட்டு இருப்போம். ஒரு 3 நாள் கழித்து ஒரு போஸ்ட் வீட்டுக்கு வரும் அதல ஒரு முகவரி கொடுத்து அங்க போய் அவர பாருங்கனு எழுதியிருக்கும் சரி இது தான் வேலைக்கான கம்பெனியாக இருக்கும்னு அங்க போன அங்கயும் இது போல காசு வாங்குற குருப் தான் இருக்கும். அவனும் ஒரு 1000 ரூபாய் வாங்கிக்குனு ஒரு மொபைல் நம்பர கொடுத்துவிட்டு நான் சொல்ற இடத்துல போயிட்டு போன் பன்னுங்கனு சொல்லுவான். நாமலும் அந்த நம்பருக்கு கால் பன்னா அவன் பெரிய பெரிய கம்பெனிங்களில் ஆள் சேர்க்கும் ஏஜெண்டா இருப்பான். இவனுக்கு தேவை ஆள் கிடைத்தால் போதும் அவனுக்கு கம்பெனி காசு தரும். அதுக்காக அவனும் ரோடு ரோடா போஸ்டர் ஒட்டி இருப்பான். அத பார்த்துதான் இவன் வந்திருப்பானு இவன கூட்டிட்டு கொண்டு போய் அவனுக்கு தெரிந்த ஒரு கம்பெனில சேர்த்து விட்டுடுவான். ஆனால் இவன் இவ்ளோ தூரம் ஏமாந்து வர விஷயம் அவனுக்கு தெரியாது. அவனுக்கு தேவை ஆளு இவன் எங்கிருந்து எப்படி வந்தான்லாம் கண்டுக்க மாட்டான். இந்த ஏமாத்துற ஃபிராடு ஏஜென்ட்டுங்க எவன் எங்க வேலை தரானோ அவன் நம்பர சேர்த்து வச்சிருந்து வேலைத் தேடி வரவங்களுக்கு காசு வாங்கிக்குனு இப்படி ஏமாத்தி அனுப்பிடுறாங்க பாவம் இது போல அலைந்து திரிந்து வேலைக்கு பணத்தை கொடுத்து ஏமாறும் இளைஞர்கள்… இளைஞர்களே இனி விழிப்பாக இருங்கள் இது போன்ற போலி நிறுவனங்கள் வேலைத் தேடி வருவோரை குறி வைத்து திட்டமிட்டு ஏமாற்றும் போலி நிறுவனங்கள் சென்னை மற்றும் கோவை போன்ற பிற இடங்களில் பெருகி வருகின்றன,, என்னுடைய அனுபவத்தையும், என்னை விட என் நண்பன் ஒருவன் ஏமாந்து வந்ததையும் பார்த்தது எனக்கு பாவமாகவும் வேதனையாகவும் இருந்தது. அதனுடைய தாக்கமே நான் இந்த பதிவு எழுத காரணமாக அமைந்தது.
சென்னையில் பர்மா பஜார் உள்ளது. இங்கு தனியாக ஒருவன் போனால்
போதும் அவனை ஏமாற்ற அங்க பல குரூப் திரிந்து கொண்டிருக்கும். அவனிடம் உள்ளதை எப்படி
ஏமாத்தி வாங்கலாம். நம்மிடம் உள்ளதை எப்படி ஏமாத்தி விற்கலாம். எந்த இளச்சவாயன் கிடைப்பான்.
எவன் தலையில கட்டி பணத்தை புடுங்கலாம்னு… அலைந்து கொண்டிருப்பார்கள்.. நம்ம சும்மா
போனா கூட விடமாட்டார்கள்.. எனவே உஷார இருக்க வேண்டி இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் எழதுவதற்கு நிறைய இருக்கின்றன..
மீண்டும் அடுத்த நல்ல பதிவில் உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே..
நன்றி வணக்கம்..
No comments:
Post a Comment