அமாவாசை நாளில் செய்யகூடாதவையும், காரணங்களும்.
அமாவாசை
நாளில் முன்னோர்களை நினைத்து பூஜைகள் செய்வதும், தர்ப்பணம் செய்வதும்
அவசியமாகிறது.
பொதுவாக அமாவாசை நாளிலும், திதி கொடுக்கும் அன்றும், வாசலில் கோலமிடக் கூடாது.
பொதுவாக அமாவாசை நாளிலும், திதி கொடுக்கும் அன்றும், வாசலில் கோலமிடக் கூடாது.
காரணம் : அன்று அசுபமான நாள் என்பதற்கு அல்ல. முன்னோர்
வழிபாட்டில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதால்தான், இதுபோன்ற கோலமிடும்
விஷயங்களை தவிர்க்க சொல்லியிருக்கிறார்கள்.
கேளிக்கை, சுப நிகழ்ச்சிகள், சுபகாரியங்களை
தவிர்க்கலாம்.
காரணம் : அமாவாசை என்பது நிறைந்த நாள்தான். ஆனால், முன்னோர்களின்
வழிபாட்டுக்கான நாள் என்பதால்தான், அன்றைய தினம் கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க
வேண்டும்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.
காரணம் : தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது, தலையை சுற்றி எண்ணெய் ஒரு
புகை வளையத்தை உருவாக்குகிறது. இந்த வளையத்தால், காந்த அலைகள் நம் உடலக்குள்
நுழைய இயலாமல் போகும். எனவே, அமாவாசையன்று விரதம் இருக்கும் போது கிரகங்களில் இருந்தும், நட்சத்திரங்களில் இருந்தும்
பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு தேவைப்படும் என்பதால் எண்ணெய்
தேய்த்துக் குளிக்கக் கூடாது என்கிறார்கள்.
செடி, கொடிகளை பறிக்கவோ தொடவோக் கூடாது.
காரணம் : உறவுகள் இன்றி
இருக்கும் ஆத்மாக்கள் அன்றைய தினம் மரம், செடி கொடிகளில் தங்கி அவற்றின் சாரத்தை சாப்பிடுவதாக
ஐதீகம். எனவே, செடி கொடிகளை அன்றைய தினம்
தொடக் கூடாது என்கிறார்கள்
No comments:
Post a Comment