Wednesday, 7 January 2015

செஞ்சிக் கோட்டை

செஞ்சிக் கோட்டை (Gingee FortSenji Fort) (இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள்ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.


வரலாறு

செஞ்சி கோட்டையை கட்டியவர் அனந்த தேவர் என்னும் கோனார் பரம்பரையினர் ஆவர். செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார். 11 வயதிலயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர்.இவரை தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர் இவரின் மகன் கிருஷ்ண கோனார் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார் .மேலும் இந்திய அளவில் உள்ள சிறந்த கோட்டைகளுள் இதுவும் ஒன்று. பல மன்னர்கள் இக்கோட்டையை கைப்பற்ற எவ்வளவோ முயன்றபோதும் அவர்களால் இக்கோனார் பரம்பரையை வெல்ல முடியவில்லை. அனந்த கோனார் பரம்பரையினர் அழிந்த பிறகு வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆட்சி செய்தனர் அதன் பிறகு மேலும் சில மன்னர்கள் ஆட்சி செய்தனர்
ஆனந்த கோன் கி.பி. 1190-1240
கிருஷ்ணா கோன் 1240-1270
கோனேரி கோன் 1270-1290
கோவிந்த கோன் 1290-1310
வலிய கோன் அல்லது புலிய கோன் 1310-1320
இவர்கள் வரையும் ஆனந்த கோன் வாரிசுகள்
இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர்
கோபலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320-1330.

அமைப்பு




கல்யாண மண்டபத்தின் அண்மைத் தோற்றம்.
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன.

தற்போதைய நிலை

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒருதேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறைபொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.

Saturday, 3 January 2015

இசைஞானி இளையராஜா

Ilaiyaraja
தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். 1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள். இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர், இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருதையும்’, நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும்’, மூன்று முறை ‘கேரள அரசின் விருதையும்’, நான்கு முறை ‘நந்தி விருதையும்’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருதையும்’, ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று, இசையால் தமிழ் நெஞ்சங்களில் உதிரத்தில் கலந்து, நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கிய இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசை மற்றும் திரைத்துறையில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 2 ஜூன், 1943
பிறப்பிடம்: பண்ணைப்புரம்தேனிசென்னை மாகாணம், இந்தியா
பணி: திரைப்பட இசையமைப்பாளர்பாடலாசிரியர்பாடகர், வாத்தியக்கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
அவர், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜூன் மாதம் 2 ஆம் தேதி, 1943 ஆம் ஆண்டில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஞானதேசிகன். இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், கமலாம்மாள், பத்மாவதி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். அவரது சகோதரரான அமர் சிங் என்ற கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
ஞானதேசிகனாகப் பிறந்த அவர், டேனியல் ராசய்யா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். சில காலம் கழித்து, ராஜையா என்று மறுபடியும் பெயர்மாற்றம் செய்ததால், அனைவரும் அவரை ராசய்யா என்று அழைத்தனர். சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார். ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார். வீட்டில் வறுமைக் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திக்கொண்டார். தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார். பின்னர், லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கமும் வென்றார்.
இசையுலகப் பிரவேசம்
நாடகக்குழுவில் இசைக் கச்சேரிகளும், நாடகங்களும் பங்கேற்று வந்த அவர், 1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் பணிபுரிந்தார். பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காலக்கட்டங்களில் தான், அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி, அவர் இருந்த இசைக்குழுவில் உள்ள சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார். மேலும், அவர் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் தந்தையான ஆர். கே. சேகரிடம் வாத்தியங்களை வாடகைக்கு எடுத்தும் இசையமைப்பார்.
திரையுலக வாழ்க்கை
அவரைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர், பஞ்சு அருணாச்சலம் அவர்கள். 1975ல் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் அடுத்தப் படமான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அவரை ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில், மேற்கத்திய இசையோடு தமிழ் மரபையும் புகுத்தி, அவர் உருவாக்கிய ‘மச்சானப் பாத்தீங்களா?’ என்ற பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், அவர் தொடர்ந்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘16 வயதினிலே’, ‘24 மணி நேரம்’, ‘100வது நாள்’, ‘ஆனந்த்’, ‘கடலோர கவிதைகள்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘ஆணழகன்’, ‘ஆண்டான் அடிமை’, ‘ஆராதணை’, ‘ஆத்மா’, ‘ஆவாரம்பூ’, ‘ஆபூர்வ சகோதர்கள்’, ‘அடுத்த வாரிசு’, ‘மூன்றாம் பிறை’, ‘மௌன ராகம்’, ‘முதல் மரியாதை’, ‘முள்ளும் மலரும்’, ‘முந்தானை முடிச்சு’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘அமைதிப்படை’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘நாயகன்’,  ‘அன்புள்ள ரஜனிகாந்த்’, ‘பத்ரக்காளி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சின்ன தம்பி’, ‘சின்னவர்’, ‘தர்ம துரை’, ‘பாயும் புலி’, ‘பணக்காரன்’, ‘எஜமான்’, ‘குணா’, ‘இன்று போய் நாளை வா’, ‘இதயத்தை திருடாதே’, ‘காக்கி சட்டை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கைராசிக்காரன்’, ‘கலைஞன்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’,  எனப் பல நூற்றுக்கணக்கானப் படங்களுக்கு இசையமைத்துப் புகழின் உச்சிக்கே சென்றார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல், அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என 950 க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்குப் பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.
பிற இசையாக்கங்கள்
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில், அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். ஆனால், அவர் இசையமைத்த சிம்பொனி இன்றளவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரைத் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கின்றனர்.
  • “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கினார்.
  • இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த ‘ஹவ் டு நேம் இட்’ (“How to name it”) என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார்.
  • “இளையராஜாவின் கீதாஞ்சலி” என்ற தமிழ் பக்தி இசைத்தொகுப்பினையும்,  “மூகாம்பிகை” என்ற கன்னட பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டார்.
  • ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.
எழுத்தாளராக இளையராஜா
அவரது பெற்றோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், நடைமுறையில் அவர் இந்துமதத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவராகவும், ஒரு பக்திமார்க்கமான வாழ்க்கையே வந்து வந்தார். ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள அவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’, ‘வழித்துணை’, ‘துளி கடல்’, ‘ஞான கங்கா’, ‘பால் நிலாப்பாதை’, ‘உண்மைக்குத் திரை ஏது?’, ‘யாருக்கு யார் எழுதுவது?’, ‘என் நரம்பு வீணை’, ‘நாத வெளியினிலே’, ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்’, ‘இளையராஜாவின் சிந்தனைகள்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
இல்லற வாழ்க்கை
அவர், ஜீவா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் பிறந்தனர். இவர்கள் மூவரும் தமிழ்த் திரையுலகின் இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர்.
 விருதுகள் 
  • 1988 – தமிழ்நாடு அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பித்தது.
  • 2010 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • 2012 – ‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்.
  • 1988 – மத்திய பிரதேச அரசின் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது.  இசையில் அவர் புரிந்த சாதனைக்காக, 1994ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
  • தேசிய விருதுகளை ‘சாகர சங்கமம்’ என்ற படத்திற்காக 1984லும், ‘சிந்து பைரவி’ என்ற படத்திற்காக 1986லும், ‘ருத்ர வீணா’ என்ற படத்திற்காக 1989லும், ‘பழசி ராஜா’ என்ற படத்திற்காக 2௦௦9லும் பெற்றார்.
  • 1989ல் அவரது சிறந்த பங்களிப்பிற்காகவும், 1990ல் ‘போபிலி ராஜா’ என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும், 2௦௦3ல் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும், 2௦௦5ல் ‘அச்சுவிண்டே அம்மா’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றார்.
  • தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை 1977ல் ‘16 வயதினிலே’ படத்திற்காகவும், 1980ல் ‘நிழல்கள்’ படத்திற்காகவும், 1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1988ல் ‘அக்னி நட்சத்திரம்’ படத்திற்காகவும், 1989ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘கரகாட்டக்காரன்’ படங்களுக்காகவும், 2009ல் ‘அஜந்தா’ படத்திற்காகவும் வென்றார்.
  • கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை, 1994ல் ‘சம்மோஹனம்’ என்ற படத்திற்காகவும், 1995ல் ‘கலபாணி’ படத்திற்காகவும், 1998ல் ‘கள்ளு கொண்டொரு பெண்ணு’ என்ற படத்திற்காகவும் பெற்றார்.


Thursday, 1 January 2015

2015 புத்தாண்டுக்குரிய தெய்வம் சாஸ்தா

2015 புத்தாண்டுக்குரிய தெய்வம் சாஸ்தா. அவருக்குரிய 108 போற்றியை தினமும் படித்து செல்வச் செழிப்பும், நாடு போற்றும் நற்புகழும் பெறலாம். புதிய ஆண்டில் புதுமை படைக்கலாம்.
ஓம் அரிஹர சுதனே போற்றி
ஓம் அன்னதான பிரபுவே போற்றி
ஓம் அலங்கார ரூபனே போற்றி
ஓம் அனாத ரட்சகனே போற்றி
ஓம் அச்சன் கோயில் அரசே போற்றி
ஓம் அரனார் திருமகனே போற்றி
ஓம் அகிம்சாமூர்த்தியே போற்றி
ஓம் அதிர்வெடி பிரியனே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகனே போற்றி
ஓம் அருள்நெறி அரசே போற்றி
ஓம் அமரர்க்கு அதிபதியே போற்றி
ஓம் அபய பிரதாபனே போற்றி
ஓம் அன்புக்கு அதிபதியே போற்றி
ஓம் ஆதரிக்கும் தெய்வமே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஆரியங்காவு அய்யா போற்றி
ஓம் ஆனைமுகன் சோதரனே போற்றி
ஓம் ஆதிசக்தி பாலகனே போற்றி
ஓம் இருமுடி பிரியனே போற்றி
ஓம் இரக்கம் மிகுந்தவனே போற்றி
ஓம் இச்சை களைபவனே போற்றி
ஓம் இன்னிசை பிரியனே போற்றி
ஓம் ஈசன் மகிழ் பாலகனே போற்றி
ஓம் ஈர மனம் படைத்தானே போற்றி
ஓம் உண்மை நெறியினனே போற்றி
ஓம் உத்திர நட்சத்திர சீலனே போற்றி
ஓம் ஊமைக்கு அருளினாய் போற்றி
ஓம் எங்கள் குலதெய்வமே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏழைப் பங்காளனே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்குபவனே போற்றி
ஓம் ஏகாந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஐந்து மலைக்கரசனே போற்றி
ஓம் ஐங்கரன் சோதரனே போற்றி
ஓம் ஒப்பிலா மாமணியே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் கணபதி சோதரனே போற்றி
ஓம் கற்பூர ஜோதியே போற்றி
ஓம் கவுஸ்துப மணியே போற்றி
ஓம் கருணாகரக் கடவுளே போற்றி
ஓம் கருப்பணன் தோழனே போற்றி
ஓம் காக்கும் காவலனே போற்றி
ஓம் காட்டில் கிடைத்தவனே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் காந்தமலை ஜோதியே போற்றி
ஓம் காருண்ய சீலனே போற்றி
ஓம் கிருபை புரிபவனே போற்றி
ஓம் கிரகதோஷம் நீக்குவாய் போற்றி
ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி
ஓம் குழத்துப்புழை பாலனே போற்றி
ஓம் குருவின் குருவே போற்றி
ஓம் குற்றம் களைவாய் போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் குணக்குன்றே போற்றி
ஓம் கேசவன் மகனே போற்றி
ஓம் சத்திய சொரூபனே போற்றி
ஓம் சபரிபீட வாசனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சத்குரு நாதனே போற்றி
ஓம் சத்துரு சம்ஹாரனே போற்றி
ஓம் சரணகோஷ பிரியனே போற்றி
ஓம் சச்சிதானந்த மூர்த்தியே போற்றி
ஓம் சாஸ்வதமானவனே போற்றி
ஓம் சாதுஜனப் பிரியனே போற்றி
ஓம் சிந்துõர வண்ணனே போற்றி
ஓம் சிங்கார செல்வனே போற்றி
ஓம் சியாமள தேகனே போற்றி
ஓம் சின்மய சொரூபனே போற்றி
ஓம் சிவனார் பாலகனே போற்றி
ஓம் சீனிவாசன் மகனே போற்றி
ஓம் சுடர் வடிவானவனே போற்றி
ஓம் சைதன்ய ஜோதியே போற்றி
ஓம் ஞானவடிவானவனே போற்றி
ஓம் தவக்கோலம் கொண்டாய் போற்றி
ஓம் தர்ம சாஸ்தாவே போற்றி
ஓம் திக்கெலாம் நிறைந்தாய் போற்றி
ஓம் தீப தரிசனமே போற்றி
ஓம் தீன தயாளனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் பம்பைக்கு அரசனே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் புலியேறி அமர்ந்தாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் பொன்னம்பல வாசனே போற்றி
ஓம் மகரஜோதி பிரியனே போற்றி
ஓம் மணிகண்ட பிரபுவே போற்றி
ஓம் மகிஷி மர்த்தனனே போற்றி
ஓம் மதகஜ வாகனனே போற்றி
ஓம் மணியின் நாதமே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் முக்தி அளிப்பவனே போற்றி
ஓம் மெய்யான தெய்வமே போற்றி
ஓம் மேன்மை மிக்கவனே போற்றி
ஓம் மோகினி பாலகனே போற்றி
ஓம் மோகன ரூபனே போற்றி
ஓம் வாபர் தோழனே போற்றி
ஓம் வான்புகழ் மிக்கவனே போற்றி
ஓம் வாழ்வு அளிப்பவனே போற்றி
ஓம் விஜய பிரதாபனே போற்றி
ஓம் வில்லாளி வீரனே போற்றி
ஓம் வீரமணி கண்டனே போற்றி
ஓம் வேதப் பொருளோனே போற்றி
ஓம் வேந்தன் மகனே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி 

அமாவாசை

அமாவாசை  நாளில் செய்யகூடாதவையும், காரணங்களும்.                                                          அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து பூஜைகள் செய்வதும், தர்ப்பணம் செய்வதும் அவசியமாகிறது.
பொதுவாக அமாவாசை நாளிலும், திதி கொடுக்கும் அன்றும், வாசலில் கோலமிடக் கூடாது.
காரணம் : அன்று அசுபமான நாள் என்பதற்கு அல்ல. முன்னோர் வழிபாட்டில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதால்தான், இதுபோன்ற கோலமிடும் விஷயங்களை தவிர்க்க சொல்லியிருக்கிறார்கள்.
கேளிக்கை, சுப நிகழ்ச்சிகள், சுபகாரியங்களை தவிர்க்கலாம்.
காரணம் : அமாவாசை என்பது நிறைந்த நாள்தான். ஆனால், முன்னோர்களின் வழிபாட்டுக்கான நாள் என்பதால்தான், அன்றைய தினம் கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.
காரணம் : தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது, தலையை சுற்றி எண்ணெய் ஒரு புகை வளையத்தை உருவாக்குகிறது. இந்த வளையத்தால், காந்த அலைகள் நம் உடலக்குள் நுழைய இயலாமல் போகும். எனவே, அமாவாசையன்று விரதம் இருக்கும் போது கிரகங்களில் இருந்தும், நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு தேவைப்படும் என்பதால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது என்கிறார்கள்.
செடி, கொடிகளை பறிக்கவோ தொடவோக் கூடாது.
காரணம் : உறவுகள் இன்றி இருக்கும் ஆத்மாக்கள் அன்றைய தினம் மரம், செடி கொடிகளில் தங்கி அவற்றின் சாரத்தை சாப்பிடுவதாக ஐதீகம். எனவே, செடி கொடிகளை அன்றைய தினம் தொடக் கூடாது என்கிறார்கள்
அமாவாசை  நாளில் செய்யகூடாதவையும், காரணங்களும்.                                                          அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து பூஜைகள் செய்வதும், தர்ப்பணம் செய்வதும் அவசியமாகிறது.
பொதுவாக அமாவாசை நாளிலும், திதி கொடுக்கும் அன்றும், வாசலில் கோலமிடக் கூடாது.
காரணம் : அன்று அசுபமான நாள் என்பதற்கு அல்ல. முன்னோர் வழிபாட்டில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதால்தான், இதுபோன்ற கோலமிடும் விஷயங்களை தவிர்க்க சொல்லியிருக்கிறார்கள்.
கேளிக்கை, சுப நிகழ்ச்சிகள், சுபகாரியங்களை தவிர்க்கலாம்.
காரணம் : அமாவாசை என்பது நிறைந்த நாள்தான். ஆனால், முன்னோர்களின் வழிபாட்டுக்கான நாள் என்பதால்தான், அன்றைய தினம் கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.
காரணம் : தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது, தலையை சுற்றி எண்ணெய் ஒரு புகை வளையத்தை உருவாக்குகிறது. இந்த வளையத்தால், காந்த அலைகள் நம் உடலக்குள் நுழைய இயலாமல் போகும். எனவே, அமாவாசையன்று விரதம் இருக்கும் போது கிரகங்களில் இருந்தும், நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு தேவைப்படும் என்பதால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது என்கிறார்கள்.
செடி, கொடிகளை பறிக்கவோ தொடவோக் கூடாது.
காரணம் : உறவுகள் இன்றி இருக்கும் ஆத்மாக்கள் அன்றைய தினம் மரம், செடி கொடிகளில் தங்கி அவற்றின் சாரத்தை சாப்பிடுவதாக ஐதீகம். எனவே, செடி கொடிகளை அன்றைய தினம் தொடக் கூடாது என்கிறார்கள்